Sunday, August 23, 2015

ஆன்மாவின் பயணம் - பாகம் இரண்டு

ஆன்மாவின் பயணம் பாகம் ஓன்று எழுதியபோது அதற்கு இவ்வளவு ஆதரவும் கருத்து வேறுபாடுகளும்  இருக்கும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை.... பல வழிகளிலும் கருத்துக்களை சொன்ன உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விமர்சகர்கள் இருந்தால் தான் நாம் செய்வது சரியா தவறா என்று ஒரு முறை நமை நாமே திரும்பி பார்த்துக்கொள்ள  முடியும்.

இந்த ஆன்மாவின் பயணத்தில்  என் மனதுக்கு ஒத்து போகின்ற கருத்துகள் மட்டுமே நான் எழுதுகிறேன். இதில் உள்ளவை உங்கள் உணர்வோடு முழுவதும் ஒத்திசைந்து போக வாய்ப்பில்லை. ஏனென்றல் ஒவ்வொரு ஆன்மாவின் பயணமும் வேறு வேறாக இருக்கும். நாம் சில பாதைகளில் ஒன்றாக பயணித்திருக்கலாம் . உங்கள் மனதோடு   ஒத்திசைந்து போகின்றனவைகளை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். ஒத்து போகதவைகளை பற்றி நாம் விவாதிக்கலாம்.

ஆன்மாவுக்கு ஜாதி மதம், இனம் எதுவும் இல்லை. ஒரு சிறிய அணுவாய் ஜனித்து பின் கிருமியாய், புல்லாய் , புழுவாய் எல்லாமாகி பின் மனிதனாய் பால முறை பிறந்தவனுக்கு ஏது ஜாதி மதம் இனம். "நமக்குளே எல்லாமும் எல்லாவற்றிலும் நாமே". தோழர் தி.தமிழ் இளங்கோ அவர்கள் சுட்டிக்காட்டிய பட்டினத்தார் பாடல் வரிகள் போல

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே  

அவர் அன்றே ஞானம் பெற்று விட்டார். நாம் இன்னும் ஞானத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அதன் எல்லா பிறப்புகளின் (முன்ஜென்ம)  நினைவுகளும் அடி மனதில் (subconscious mind ) இருக்கும்.  நாம் உறங்கும் போது நமக்கு வரும் கனவுகளை பற்றி சிந்தித்து இருக்கிறீர்களா? அதில் எத்தனை முகம் நமக்கு தெரிந்த முகம்? அதில் எத்தனை இடம் தெரிந்த இடம் ?  தெரியாத முகங்களும் அவர்களுடன் நாம் வாழ்வதும் தெரியாத இடங்கள் மிக துல்லியமான வீடு காடு கடல் என எப்படி நாம் காண முடியும்?

இதை பற்றி நான் என் தோழி ஒருவரோடு விவாதித்து கொண்டிருந்த போது அவர் சொன்னார் மைதிலி எனக்கும் முற்பிறப்பில் நம்பிக்கை இருக்கிறது ஆனால் அது ஏன் நமக்கு ஞாபகம் வருவதில்லை என்பதற்கு (justification) நியாயப்படுத்த எதாவது கரணம்  இருக்கிறதா  என்று கேட்டார்.
இருக்கிறது என்று சொன்னேன். நாம் சில கனவுகள் வரும் போது அதிலும் நம் அன்பிற்கு உட்பட்டவர் யாரேனும் இறந்து போகும் கனவுகளோ அல்லது நமக்கே ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ நிஜத்தில் ஏற்பட்டது போல தாங்க முடியா வலியும் வேதனையும் நமக்கு வரும். அது கனவு என்றுணர்ந்து  அதிலிருந்து மீழவே நமக்கு சில நாட்கள் பிடிக்கும். அதை பற்றியே சிந்தித்து கொண்டிருப்போம். ஒரு வேளை  நமக்கு எல்லா ஜென்ம நினைவுகளும் வந்தால் நாம் வாழவே முடியாது. நாம் பட்ட துயரங்கள், இறந்து பிரிந்த உறவுகள், துடித்த தருணங்கள், ஏமாற்றியவர்கள். நம்மால் எவரையும் மன்னிகவோ மறக்கவோ முடியாது.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நம்முடைய ஆன்மா ஒவ்வொரு பிறப்பிலும் நினைவுகளை சேகரிக்கிறது ஆனால் அவை ஒவ்வொரு ஜனனத்திலும் மறைத்து அடிமனதில் ஒளித்து வைக்கப்படுகிறது. சில நினைவுகள் நமக்கு கனவாக வெளிப்படுகிறது. சிலவை நம்மால் உணர மட்டுமே முடிகிறது. இதற்க்கு எடுத்து காட்டு நாம் உறவகளை விட நாம் எங்கயோ சந்தித்த ஒரு நொடியில் நண்பர்களானவர்கள் மற்றும்  நாம் அறியாத சிலர் மேல் காண்பிக்கும் அளவுகடந்த பரிவு.நாம் ஆழ்ந்து உறங்கும் போது தெளிவான கனவுகள் (lucid dreams ) மூலம் நம் முற்பிறப்புகள்  பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று ஆராய்ட்சி ஆளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த பாகத்தில் இதை பற்றியும் எழுதுகிறேன். இன்னும் பல விவாதங்களும் செய்யலாம்.

பி.கு : நான் இங்கு முன் ஜென்மங்களை பற்றி பேச வரவில்லை அதனால் சுருக்கமாக கூறி இருக்கிறேன். ஆன்மாவின் பயணத்தில் ஆன்மா ஒவ்வொரு ஜனந்த்திலும் அதிக பரிமாணத்தை  (reaches higher dimension ) அடைகிறது.


                               3 comments:

 1. ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அதன் எல்லா பிறப்புகளின் (முன்ஜென்ம)  நினைவுகளும் அடி மனதில் (subconscious mind ) இருக்கும்.  நாம் உறங்கும் போது நமக்கு வரும் கனவுகளை
  பற்றி சிந்தித்து இருக்கிறீர்களா? அதில் எத்தனை முகம் நமக்கு தெரிந்த முகம்? அதில் எத்தனை இடம் தெரிந்த இடம் ?  தெரியாத முகங்களும் அவர்களுடன் நாம் வாழ்வதும்
  தெரியாத இடங்கள் மிக துல்லியமான வீடு காடு கடல் என எப்படி நாம் காண முடியும்?///
  vanakkam madam,

  ungalin anupavathil ungalin kanavu patriya vilakkam puthithaaka/svaarasyamaaka irunthaalum ariviyalrithiyaaka paarthal etrukkolla mudiyaathathakka irukkirathe?


  aanal.

  நாம் ஆழ்ந்து உறங்கும் போது தெளிவான கனவுகள் (lucid dreams ) மூலம் நம் முற்பிறப்புகள்  பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று ஆராய்ட்சி ஆளர்கள் தெரிவிக்கின்றனர்.
  அடுத்த பாகத்தில் இதை பற்றியும் எழுதுகிறேன்.///

  puthiya thakaval antha aaraychi mudivukalai padikkaa aarvathodu waiting madam.

  ReplyDelete
 2. // ஆன்மாவுக்கு ஜாதி மதம், இனம் எதுவும் இல்லை. ஒரு சிறிய அணுவாய் ஜனித்து பின் கிருமியாய், புல்லாய் , புழுவாய் எல்லாமாகி பின் மனிதனாய் பலமுறை பிறந்தவனுக்கு ஏது ஜாதி மதம் இனம் ///

  ஆன்மாவைப் பற்றி ஆழ்ந்த சிந்தனையோடு நல்லதொரு பதிவைத் தந்து இருக்கிறீர்கள். ஆன்மாவை உணர்தல், தேடுதல் என்றாலே விடைதெரியா கேள்விகளில்தான் முடியும். இந்த பதிவினில் எனது பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி. அடுத்த பதிவினை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. தங்கள் தளத்திற்கு புதியவன் ஆன்மா அழகு இனி வருவேன் தொடர்ந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றி

  அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!

  ReplyDelete