Tuesday, July 21, 2015

தத்துப் பூக்கள்

ஒரு ரயில் பயணத்தின் போது 
ஜன்னல் வெளியே பச்சையாய் 
பூமா தேவியின் அழகை ரசித்து 
பார்த்து கொண்டிருந்தேன் ........

மழையும் காற்றும் சில்லென 
மாறி மாறி இதமாக அடித்தது 
எங்கும் பூக்களாய் இருந்தது 
புல்லிலும் பூக்கள் ..............

செடிகளிலும் மரங்களிலும் பூக்கள் 
கொடிகளிலும் பூக்கள் சரம்சரமாய் 
பூக்கள் இல்லாத மரங்களே இல்லையோ ?உண்டல்லவா...



சிந்திக்க வைத்தன  மரங்கள்... 


பிறகு எப்படி இது சாத்தியம்? 
மரங்கள் பூக்களை தத்து 
எடுத்து கொண்டிருந்தன 
அவை தத்து பூக்கள் ..........

ஓரறிவு உள்ள மரங்களே தத்து 
எடுத்து கொள்கின்றன ஆறறிவு  உள்ள 
மனிதன் நாம்  ஏன் தத்து எடுத்துக்
கொள்ள  தயங்குகிறோம்  ...........

குழந்தை பூக்களே  இல்லாமல் 
வருந்த வேண்டாமே!!!!
தத்து எடுத்து இந்த மரங்களை 
போல வாழ்க்கையை அழகு படுத்திக் 
கொள்ளலாமே.........