Monday, August 3, 2015

ஆன்மாவின் பயணம் - பாகம் ஓன்று


ஆன்மா பலினமற்றது ஜாதி மதம் அற்றது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. இந்த ஆன்மா ஒரு உடலை போர்த்திக்கொள்ளும் போது  தான் அது பாலினமுள்ள  மனிதனாகவோ மிருகமாகவோ பறவையாகவோ மரம் செடி கொடியாகவோ  உருபெருகிறது. எல்லா ஆன்மாக்களும் பல பிறவிகள் ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் பிறப்பு எடுத்து பரம்பொருளை சென்றடைகிறது. ஞனப்பானை என்ற கவிதையில்  பூந்தானம் என்ற மலையாள கவிஞர் சொல்லுவது போல "எத்ர  ஜென்மம் மலத்தில் கழிஞ்சதும் எத்ர  ஜென்மம் ஜலத்தில் கழிஞ்சதும் எத்ர ஜென்மங்கள் மண்ணில் கழிஞ்சதும் எத்ர  ஜென்மங்கள் மரங்களாய் நின்னதும் எத்ர  ஜென்மங்கள் மரிச்சு நடந்னதும் எத்ர   ஜென்மங்கள் மிருகங்கள் பசுக்களாய்" பல பல ஜென்மங்கள்.
முக்தி என்பதை அடையும் வரை மீண்டும் மீண்டும் எதோ ஒரு தாயின் கருவறையில்  ஆன்மா  ஜனிக்கிறது. பிறக்கும் போதும் நாம் ஏதும் கொண்டு வருவதில்லை இறக்கும் போதும் நாம் ஏதும் கொண்டு போக முடியாது . அவரவர் கர்மாக்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ஞானம் வளர சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் அமையும். அம்மாதிரியான சூழ்நிலைகளில் பக்குவப்பட்டு எல்லா பற்றுகளையும் துறக்கும் போது ஆன்மா முக்தி அடைகிறது.  பற்று என்பது நான் எனது என்ற எண்ணங்கள்.  எல்லா  பிறவிகளிலும் மனித பிறவி சிறந்தது. ஏனென்றால் மனித பிறவி அடைந்தவுடன் நாம் சிந்தனைக்கு ஏற்ப நடக்க கூடிய சுதந்திரம் நம் ஆன்மாவிற்கு கிடைக்கிறது. எத்தனையோ பிறவிகள் காத்து இருந்து தான் நமக்கு மனிதப்பிறவி கிடைக்கிறது. இனியும் எத்தனையோ மனிதப்பிறப்புகள் எடுக்கவேண்டி இருக்கிறது. இந்த மனித பிறவியில் துன்பங்களுக்கும்  இன்பங்களுக்கும்  மாறி மாறி நாம்  உட்படுத்தப்படுகிறோம். நாம் நம்முடைய பற்றுகளை கொஞ்சம் கொஞ்சமாக துறக்க கற்றுக்கொள்கிறோம்.நம்மிடையே புதிய ஆன்மாக்களும் பழைய ஆன்மாக்களும் உண்டு. பழைய ஆன்மாக்களை கண்டறிய முடியும். அவர்கள் பற்றற்றவர்களாகவும் அளவுகடந்த  ஞானம் உள்ளவர்களாகவும் நான் எனது என்ற அகம்பாவம் இல்லாதவர்களாகவும் யாரையும் அடிமை படுத்தாமல் சமமாக நடத்துபவர்களாகவும் பேராசை இல்லாதவர்களாகவும் பொறுமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகள் செய்வர்.
எதோ ஒரு சமயம் நமது அனுபவத்திற்கு  ஏற்ப நமது ஆன்மா விழித்து கொள்கிறது. நம் உடல் வெறும் ஒரு சட்டை, நமது உடைமைகளும் உறவுகளும்  எதுவும் நமக்கு சொந்தமில்லை என்றும் சீக்கிரமே அழிந்து விடும் என்றும் புரிந்து கொள்கிறோம். எல்லா உயிரினத்தோடும் அன்பு செலுத்த தொடங்கி விடுகிறோம்.  நம்மை நாமே கேள்வி கேட்க தொடங்குகிறோம். நான் யார்? நான் ஏன் இங்கே பிறந்தேன்?  நான் எதற்காக பிறந்தேன்? நான் எங்கே போய்  சென்றடைவேன் ? நான்  யாருக்கும்  கட்டுப்பட்டவன்/வள்?  நான் தாயா, தந்தையா, மகனா, மகளா, மனைவியா, கணவனா? இப்படி எந்த உறவிற்கும் நாம் பொருந்தாதது போலும் ஆண் பெண் பாகுபாடு இன்றியும் சிந்திக்க தொடங்கி விட்டிருந்தீர்களானால் நீங்கள் அதாவது உங்கள் ஆன்மா விழிப்படைய தொடங்கி விட்டர்கள் என்று அர்த்தம்......................
                                                                                                                         (தொடரும் )


10 comments:

 1. இன்றுதான் முதன் முதல் உங்கள் வலைப்பக்கம் வருகின்றேன். இந்த பதிவு, எனது அம்மாவின் நினைவுகளோடு, ஆன்மீக சிந்தனைகளைக் கிளறிய பதிவு. நினைவுக்கு வந்த சித்தர் பாடல் ஒன்று.

  அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
  அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
  பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
  பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
  முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
  மூடனாயடி யேனும றிந்திலேன்,
  இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
  என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே
  - பட்டினத்தார்.

  தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு @தி.தமிழ் இளங்கோ அவர்களே..
   பட்டினத்தார் அன்றே பாடிவிட்டு சென்றார்
   இன்னும் நாமதனை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்
   அவருக்கு புரிந்ததில் கொஞ்சம் எனக்கும் புரிந்ததில மிகவும் ஆனந்தமடைகிறேன்.

   Delete
 2. sinthikka thuvangkinal athu eppadi aanmaa vilippadaiya thuvangki iruppatahaka
  mudivukku vanthirkal madam.


  ennai porutha varaiyilum sinthikka thuvangkiya manithan intha anma paavam, punniyam, karma pondra vidaiyangakalai nampa maattan.

  adutha pakuthikkaka waiting.
  thodarkiren madam!

  ReplyDelete
  Replies
  1. @திருப்பதி மஹேஷ் முதலில் உங்களுக்கு எனது நன்றி எனது பக்கத்தை பொறுமையாக வாசித்தமைக்கு. கேள்விகள் கேட்க்க தொடங்கும் போது பதில்கள் வர தொடங்கும். ஒரு பதில் அல்ல பல பதில்கள். பல கோணங்கள் நம் கண்களுக்கு தெரிய வரும். பிறரை துன்பப்படுத்த மாட்டோம். அன்பை மட்டுமே நம்புவோம். சிந்திக்க தொடங்கிய மனிதன் நீங்கள் சொல்வதை போல எதை பற்றியும் கவலை படமாட்டான் ஏனென்றால் அவன் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறான் ...
   சிந்தனைகள் தனியாக வருவதில்லை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். சிந்தனைகளுக்கு முடிவே இல்லை.

   Delete
 3. சந்தித்தலில் பலரும் இவ்வாறு சுயநலம் இன்றி இருக்கிறார்கள்...

  தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. @திண்டுக்கல் தனபாலன் உங்கள் ஆதரவுக்கு நன்றி

   Delete
 4. I may not agree with many of your opinions. But I could see your soul searching effort

  ReplyDelete
  Replies
  1. Thank you chitra....
   I know that no one can completely agree with me ..

   Delete
 5. mythili ,unn sinthanaikalai mathikindren ,,thodarattum ..annma enna enpathai ariya murpadu vathae perriya panni adhai arainthu ezuthu vadivam thanthamaiku nandri.

  ReplyDelete
  Replies
  1. Thank you kalps. Naa periya ezhuthu ethum ezhuthavillai. nantri ellaam vendam.

   Delete