Friday, May 29, 2015

நாம் யார் ?























இயந்திரம் போல் உழைதுண்டுறங்கி  
எதற்காக  யாருக்காக வாழ்கிறோம் ?
பணம் பதவி கல்வி குடும்பம்
எதை தேடி ஓடிகொண்டிருக்கிறோம்?
நாம் யார் ? நமக்கென வேண்டும்?

ஜென்மங்கள் ஒன்றோ  எண்பத்தி நான்கு லக்ஷமோ ?!
எங்கிருந்து வந்தோம் ? எங்கே போகப்போகிறோம்?
அனாதைகளாக பிறந்து  அனாதைகளாகவே இறக்கிறோம்
என்ன நேடினோம்.. எதை கொண்டு போவோம்

நம்மை பெற்றவர்களும் நமக்கு சொந்தமில்லை
நாம்  பெற்றவர்களும் நமக்காக பிறக்கவில்லை
இடையில் வந்தவர்கள் மட்டும் ?!
யாரும் யாருக்கும்  உறவில்லை
உறவென்றாலே ஒரு வகை அடிமைத்தனம்
படிப்படியாக வரிசை படுத்தி வைக்கபட்டவை 

நாம் ஒவ்வொருவரும் தனி மனிதர்கள்
நம்முடைய மனதோடும் சிந்தனைகளோடும்
ரத்தமும் சதையும் கொண்டு செய்யப்பட்ட
உடல் சட்டைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறோம் 
புலி தோல் போர்த்திய பசுவாகவோ
பசு தோல் போர்த்திய புலியாகவோ !!
ஏன் நாம் இரக்க குணம் உள்ளவர்களாக
மனித நேயம் உள்ளவர்களாக...
போதும் என்ற மனதோடு வாழக்கூடாது ?

உடல்  சட்டையை அலங்கரிக்கும் பொத்தான்கள்
தான் நம்முடைய படிப்பு பணம் பதவி எல்லாம்
சட்டை எப்படி  இருந்தாலும் நாம்  சமமே.....
இந்த அழகிய பூமி, நீர், நிலம், காற்று, ஆகாயம்
எல்லாவர்க்கும் பொதுவானது...
இந்த நொடி மட்டுமே நமக்கு சொந்தம்
அடுத்த நொடி நமது கையில் இல்லை
முதலில் உங்களை நேசியுங்கள்
பின் மற்றவர்களையும் நேசியுங்கள்

எதையோ சொல்ல வந்து எதையோ
சொல்லிவிட்டு போகிறேன்.......... 











Thursday, May 14, 2015

மேக ஓவியம்


விரித்த  ஒற்றை வான வரை திரையில்....
நித்தம் இரவு பகலாக
பல்லாயிரம் ஓவியங்கள் ...
மேக வர்ணம் பூசி
காற்று தூரிகை கொண்டு
கறுப்பு  வர்ணத்தையும்
வெள்ளை வர்ணத்தையும்
குழைத்து அழகாக தீட்டுகிறான்.....

அந்த மாய ஓவியன் யார் ??
ஓன்று மட்டும் தெளிவாக தெரியுது
வெயிலடிக்கும் போது அவன்
அயர்ந்து ஓய்வெடுக்கிறான்....
மழை பெய்யும் போது
சுறுசுறுப்பாக ஓவியங்களை
தீட்டி தள்ளுகிறான்....