*காதல் கரு கலைந்தது*
என்னுள் கருவாய் வந்தாய் !!
உன் அழகிய உருவம் காண ஆவலாய் இருந்தேன் !
நாட்கள், மாதங்கள், வருடங்கள் காத்திருந்தேன், ஆனால் இறுதியில்
என் ஆணி வேரை அறுத்துவிட்டு முழுவதுமாய்
உருவெடுக்காமல்
குறை மாதத்தில் பிறந்து உயிர் களைந்தாய்.
ஸ்தம்பித்து போனது எனதுலகம்
இறப்பதற்காகவா என்னுள் குருவாய் சூல் கொண்டாய்
உன் காந்த
புன்னகையில் கிறங்கி போதையில் கிடந்திட துடித்திருந்தேன்
உன் பிஞ்சு பஞ்சு
விரல்கள் பிடித்து உலகம் முழுவதும் சுற்றி வர ஏங்கிக்கிடந்தேன்
உன் பட்டு பாதம்
என் நெஞ்சில் மிதித்து விளையாடும் நாளுக்காக தவமிருந்தேன்
உன் அணைப்பின்
சுகமதில் பனியாய் உருக கண்மலர் பூத்திருந்தேன்
உன் மழலை மழையில்
மெய்சிலிர்த்து நனைய கனாக்கண்டிருந்தேன்
ஈருடல் ஓருயிராய்
உன்னோடு நீயறியாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன்
எல்லாம்
பொய்யாக்கிவிட்டு நீ மரித்துவிட்டாய் !
ஜனனம்
உண்டென்றால் மரணம் உண்டு
மரணம் உண்டென்றால்
ஜனனம் உண்டு
இப்போது நீ
வேறோர் இதயத்தில் கருவாகி விட்டாய்
உன்னுடைய இந்த
ஜனனமாவது முழுமை பெறட்டும்
வாழ்க வளமுடன் !!
No comments:
Post a Comment