ஒரு சிறிய விதைக்குள் பெரிய மரம் ஒளிந்திருக்கிறது. வெண்டை விதை போட்டால் வெண்டை முளைக்கும் .ஆலம் பழம் விழுந்தால் அரசமரமா முளைக்கும் ? முருங்கை கம்பு ஊன்றினால் முருங்கைக்காய் பறிக்கலாம்
ரோஜா கம்பை ஊன்றினால் சூரிய காந்தி பூக்களா பூக்கும் இந்த நியதி தானே மிருகங்களுக்கும்...
வித்து தானே ஒரு செடி / மரத்தின் பண்புகளை தீர்மானிக்கிறது . அது முழுவதுமாக வளர்வதும் வளராததும் அதற்க்கு கிடைக்கும் உரம் நீர் வெயில் மற்றும் அதனை பராமரிப்பதை பொறுத்தது.நன்றாக உரமிட்டாலோ இல்லை கொடி போல படர்த்த முயற்சித்தாலோ தென்னங்கன்று பூசனிச் செடியாய் மாறி பூசனிக்காய் காய்க்க தொடங்கி விடுமா ? ? ?
மனிதனும் இதற்க்கு விதி விலக்கல்லவே விந்துவாய் இருந்து கருவாய் தாயின் வயிற்றில் ஜனிக்கும் பொழுதே அவன் / அவளின் திறன்களும் நிச்சயிக்கப்படுகிறது என்று தானே அர்த்தம். உலகம் முழுவதும் தென்னை மரங்கள் மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்? யாருக்கு வேண்டும் இந்த ஏற்பாடு. ஆசையாய் பெற்றெடுத்த குழந்தைகளை மட்டும் ஏன் இப்படி ??
இப்படி ஆகவேண்டும் அப்படி ஆகவேண்டும் இது தான் நல்லது என்று துன்பபடுத்தி அவர்களுக்கு அவசியமான உரங்களை அளிக்காமல் உங்கள் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வளைத்து நெளித்து உங்கள் ஆசைகளை திணித்து உங்களுக்கு பிடித்த உரங்களை இட்டு அவர்களை அவர்களாக இருக்க விடாமல் மானசீகமாக முடமாக்கி அவர்கள் தனித்தன்மையை இழக்க வைத்து துன்புறுத்துகிறீர்கள்.
உங்கள் கடமை வளர வேண்டிய சூழ்நிலையை மட்டும் குடுக்க வேண்டியது தானே !! அன்பு ஆதரவு ஊக்கம் இது தானே நீங்கள் கொடுக்க வேண்டியது. விதைக்குள் ஒளிந்திருக்கும் மரம் எதுவென்று உங்களுக்கு தெரியாதே! குழந்தை அதனுடைய தனித்தன்மையோடு வளரட்டும் !! விதையை அதன் போக்கில் விட்டுதான் பாருங்களேன்...
ஆர்வமாய் அது வளர்வதை ரசியுங்களேன்...
நல்ல கருத்து
ReplyDeleteNandri @டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று
ReplyDeleteஅருமை தோழியே .... உண்மை
ReplyDelete