அழகனே !! சூரியனே!!
தினமும் நான் உன்னை நமஸ்கரிக்கிறேன் (சூரிய நமஸ்காரம் )
எப்பொழுதம் நீ எனக்கு முன்பே எழுந்து இருப்பாய்
உன்னை கண்ணோடு கண் பார்க்க முடிவதில்லை
அவ்வளவு காட்டம் உன் கண்களில்
இன்று கிழே விழுந்து எழும் போது தான் கவனித்தேன்
கண்முன்னே உன் பிம்பம் என் வீட்டு பளிங்கு தறையில்
இப்போது உன் கண்களை நேராக பார்க்கமுடிகிறது
வெறும் பிம்பமாய் இருந்ததால் உனக்கு காட்டம் இல்லை
ஆனால் உன் ஆழகு மட்டும் ஏனோ குறையவில்லை
சட்டென்று ஒரு எண்ணம் உன்னை சிறை படுத்த.........
நினைத்தபடி சிறைப்படுதினேன் எப்படி தெரியுமா ?
ஒரு நொடியில் ஓடிச்சென்று என் கேமரா எடுத்தேன்
நீ எதிர்பாரத சமயம் உன் பிம்பத்தை படம் பிடித்தேன்
அதை கூட உன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
நீ ஏன் உடனே மேகங்களின் உள்ளே மறைந்தாய்?
நிச்சயம் வெட்கத்தினால் இல்லை
விடவில்லையே நான் ...இதை அறிந்து தான் நீ
இன்னும் பிரகாசமாய் வெளியில் வந்தாய்
உன் வெப்பத்தை ஏற்றி கோபித்தாய்
உன் பிம்பத்தை கூட பார்க்க முடியவில்லை
உன் கண்களில் அவ்வளவு உக்கிரம்
உலகத்தயே கட்டி இழுக்கும் உன்னை என்
சிறிய கேமரா சிறை வைத்து விட்டேன் என்றா ?

No comments:
Post a Comment