வாசகர்களே, கவனிக்கவும்.. சென்ற பாகத்தில் நான் பொறியியல் கல்லூரியில் சேருவதே தவறு என்று எங்கும் கூறவில்லை. +2 பாசாகும் எல்லா பிள்ளைகளாலும் இலகுவாக படிக்க முடியாது என்று தான் சொல்லி இருந்தேன். ஆர்வமில்லா பிள்ளைகளை இன்ஜினியரிங் சேர்த்து விடாதீர்கள் (Don't force them to study engineering if they don't have any interest in the subject). இந்த பாகத்தில் ஏன் எல்லா பிள்ளைகளாலும் அதில் வெற்றி அடைய முடிவதில்லை என்று பார்க்கலாம்.
எல்லா முன்னணி கல்லூரிகளிலும் மொத்தம் உள்ள சீட்டுகளில் 50% மாணவர்கள் சராசரிக்கும், சராசரிக்கு மேலும் இருப்பார்கள். இவர்களுக்கு மிகுதியாக எந்த பிரச்சினையும் இருப்பதில்லை. மீதி 50 % மாணவர்கள் கதை சோகத்தில் தான் முடிவடைகிறது. இதில் கோர்ஸ் கைவிட்டு செல்பவர், தோற்று தோற்று மீண்டும் பெற்றோருக்காக முயற்சிப்பவர், தீய வழிகளில் செல்பவரும் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவரும் அடங்குவர்.முன்னணி கல்லூரிகளே இப்படியென்றால் சுயநிதி கல்லூரிகளை பற்றி கேட்கவே வேண்டாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ3G-YVoFbIPVOY4HipqWhE6x-2UiKSsuXZxiPMb-NPwSw6dxoqMCiRMrMYvmx-PNBmflRS5IZhyphenhyphenEBvxHhOm6HqcK7sSu8Nu76B0yvE4xdPTWj0tObJ8QpziYGS7mEbg46mwbnd75ERBE/s320/electronics.jpg)
- ஏன் இப்படி நடக்கிறது என்பதை பார்ப்போம்... பொறியியல் கல்வியின் மேல் உள்ள ஆர்வத்திற்கும் உங்கள் பிள்ளை வாங்கும் மார்க்குகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஏனெனில் +2 வில் அவர்கள் படிக்கும் பாடங்கள் மிக இலகுவானது. மனப்பாடம் செய்து கூட அவர்கள் மார்க் வாங்கி விடுவார்கள் / இருக்கலாம். இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது .. அவர்களுக்கு கணிதத்திலும் (Maths ) இயற்பியலிலும் (Physics ) எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதையே. வீட்டில் பிள்ளைகளின் படிப்பிற்காக நேரம் செலவிடும் பெற்றோர்களுக்கு இதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
- பொறியியல் கல்வி +1,+2 மாதிரி எளிதாக இருக்கப்போவதில்லை.. எல்லா பாடங்களும் சிக்கலான கணிதத்தையும், கருத்துக்களையும் (complex concepts) அடிப்படையாக கொண்டிருக்கும். சிக்கலான கருத்துக்களை ஆசிரியர் சொல்லி கொடுக்கும் போது புரிந்து கொள்ளவும், ஆசிரியர் துணை இல்லாது தானாகவே அறிந்து கொள்ளவும் ஆர்வம் இருக்க வேண்டும். மனப்பாடத்துக்கு இங்கே இடம் இல்லை. பல சமயங்களில் ஆசிரியர் துணை இல்லாமலேயே படிக்க வேண்டி இருக்கும். பரீட்சையிலும் கேள்விகள் இப்படியே வரும். ஒழுங்காக புரிந்தவர்களுக்கு மட்டுமே பதில் எழுத முடியும்.
- சில பெற்றோர்கள் இன்னும் கூட்டல், கழித்தல்,பெருக்கல் மற்றும் வகுத்தல் மட்டும் தெரிந்திருந்தால் எல்லா கணக்குகளையும் போட்டு விடலாம் என்று நினைக்கின்றனர். இவை மட்டும் சார்ந்திருப்பதல்ல இன்ஜினியரிங் பாடங்கள் . இங்கே எந்த பிரிவை எடுத்தாலும் எல்லாம் complex (சிக்கலான) and imaginary (கற்பனை) தான் from Calculus , Differential Equations, Statistics to Transforms (Fourier, Laplace etc.) வரை . எந்த பாடத்தை(subject) எடுத்துக்கொண்டாலும்.. அதிலுள்ள concepts மேலே சொல்லப்பட்ட கணிதத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். இவைகள் புத்திசாலி பிள்ளைகளுக்கு கூட ஒரு சவாலாகவே இருக்கும்.
- இவை அல்லாது, மாணவர்கள் தங்கள் கருத்துக்களையும் பதில்களையும் கூச்சமில்லாமல் தெளிவாக சொல்லவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிறர் உதவி இல்லாமல் சுயமாக சிந்திக்க தெரிய வேண்டும். ஆசிரியர்களிடமோ அல்லது சக நண்பர்களிடமோ தங்கள் சந்தேகங்களை எந்த வித சங்கோஜமும் இல்லாமல் கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். இதுவும் என்னுடைய அனுபவத்தில் சில பிள்ளைகளுக்கு ஒரு சவாலாகவே இருக்குது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikQSkwTjdFCjmVZH80TZ32Rtuy18Mo55FKsTlmj4qT0tSkYzL_282MrQVQM1A-GLiQnNhLIphOtIcgHvsBGP1qKWrA8eeteXM4vAB5H1c6J6_zoQNDkjeRKisvvzmfTcFV_vPXJvhcLQM/s320/mech.jpg)
இவை ஏதுவும் கவனிக்காமல் பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்தாயிற்று. இனி அந்த பிள்ளைகளை தொடர்ந்து கவனிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
- கணிதத்திலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் இல்லா மாணவர்கள் முதலில் இருந்தே ஆசிரியர்கள் நடத்தும் படங்களை புரிந்து கொள்ள முடியாது. நாட்கள் செல்ல செல்ல இவர்கள் ஆசிரியர்கள் மேல் குற்றம் சாட்ட தொடங்குவார்கள். ஆசிரியர் சரியாக சொல்லி தரவில்லை.. பாடம் ரொம்ப கடினம் என்று தங்களுக்கு தானே சொல்லி ஆறுதல் அடைந்து கொள்வார்கள். சிறிது நாட்களுக்கு பின் இவர்களுக்கு எதுவுமே புரியாது.
- பெரும்பாலான மாணவர்கள் முதல் வருடம் அதிக கவனம் செலுத்தாவிட்டாலும் எப்படியாவது பாஸ் பண்ண வாய்ப்பு இருக்கிறது. ஏன் என்றால் முதல் வருட பாடங்கள் +2 வின் extension ஆக இருக்கும். மூன்றாம் செமஸ்டர் துவங்கி எல்லா பாடங்களும் கடினமாகிவிடும். இதனால் எல்லா பிள்ளைகளின் படிப்பிலும் முதலில் ஒரு இறக்கம் வரும் பின்பு சிலர் சுதாகரித்து கொண்டு எழுந்து விடுவார்கள். சிலர் ஒரே அடியாக விழுந்து விட நேரிடும். முதல் வருஷத்திலேயே அரியர்ஸா?? பின் கேட்கவே வேண்டாம்.. மூட்டையின் கனம் வருடந்தோறும் கூடிக்கொண்டே இருக்கும். " +2 ல நல்லா படிச்ச புள்ளை இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல.. அவங்க வாத்தியார்கள் சரியாக பாடம் சொல்லி கொடுப்பதில்லை.. சரியாக மார்க் போடுவதில்லை" என்று சில பெற்றோர்கள் கடைசி வரை சொல்லிகொண்டிருப்பார்கள்.. இதற்க்கு பெற்றோர்களே.... உங்களை தவிர யாரும் பொறுப்பில்லை.
- இந்த சராசரிக்கு கீழ் புரிதல் உள்ள பிள்ளைகளுக்கு சராசரிக்கு மேல் புரிதல் உள்ள பிள்ளைகளிடம் நட்பு கொள்ள இயல்பாகவே ஒருபோதும் முடியாது. இதனால் அவர்கள் தங்களை போல் உள்ளவர்களிடமே நட்பு வைக்க முடிகிறது. இது அவர்களை இன்னும் கீழே கொண்டு விடும். ஏனென்றால் அவர்களுக்குள் செய்யும் கருத்து பரிமாற்றம் உபயோகமற்றதாக இருக்கும்.
- சிறிது நாட்களில் அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடும். கிளாஸ் கட் பண்ணுவது, பரீட்சையில் காப்பி அடிப்பது, பிட் கொண்டு செல்வது .. போன்றவற்றிற்கு தங்களை பழக்கபடுத்தி கொள்ளுவர். தங்கள் படிப்பில் முழு நம்பிக்கையையும் இழந்து விடுவர். அவர்களை சொல்லி குற்றமில்லை.. பாசாக வேண்டுமே.. வீட்டில் கேள்விகள் கேட்டு துளைப்பர்களே. இவர்களது கண்ணியமற்ற நடத்தை மற்றும் வாங்கும் மதிப்பெண்களை பார்த்து மீதி இருக்கும் ஒரு சில நல்ல நட்புகளும் விலகி சென்று விடுவர். இங்ஙனம் இவர்கள் கடைசியில் தனிமை படுத்தப்படுவார்கள்.
- இவ்வாறு நடக்கும் போது இவர்களுக்கு படிப்பில் உள்ள நாட்டம் குறையும். இந்த சமயங்களில் தீய நட்புகளின் கைகள் விழுந்து விடுவார்கள். ஆண்களானால் கல்லூரி அரசியல், கலாட்டாக்கள், சிகிரட்டு, தண்ணி போன்ற தீய விஷங்களில் இறங்கி விடுவார்கள். பின் படிப்பு எங்கே... பெண்களானால் துவண்டு போய் நடை பிணங்களாக அலைவர் . சிலர் பகட்டுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு பெற்றோர்கள் தரவில்லை என்றால் கூட student loan எடுத்து ஊதாரித்தனமாக செலவழிப்பார்கள்.
கடைசியில் டிகிரி கையில் கிடைக்காமல் போய்விடும் . இல்லையென்றால் பலவருடங்களாக எழுதி எழுதி குறைந்த அளவு மதிப்பெண்களே பெறுவார். ஒரு உபயோகமும் இருக்காது. சிலரை கல்லூரியிலிருந்தே நீக்கி விடுவார்கள். வெகு சில பெற்றோர்கள் மட்டுமே இதை சரியான நேரத்தில் உணர்ந்து பிள்ளைகளின் வாழ்வை சீர் செய்கிறார்கள்.
சரி எதோ ஆசையில் சேர்த்து விட்டாச்சு.. இனி என்ன செய்வது ?? அடுத்த பாகத்தில் சொல்ல முயற்ச்சிக்கிறேன்.
Useful guidelines for parents, who are forcing their children to enter Engineering Colleges. Kudos!
ReplyDeletegud..
ReplyDeletevery useful..
thanks..
mythii.. evlo detailaa explain panni irukkeenga..
ReplyDeleteuseful informations for all parents..!!
அருமை மைதிலி அக்கா.. மிக மிக தேவையான ஒன்று. பொறியியல் மட்டும் அல்ல. படிப்பு விசயத்தில் தங்களால் சாதிக்க முடியாததை தங்கள் மகன்/மகளை கொண்டு சாதிக்கவே பலர் எண்ணுகின்றனர்.. ரொம்ப எளிமையா நல்ல சொல்லிஇருக்கீங்க.
ReplyDeletevery nice post and children must understand that having interest in subjects is though neccessary they must have atleast a clear understand about the basics of subject.
ReplyDeletevery Useful one.
ReplyDeletewell said..
ReplyDeletemost peple.. they just join engg colleges.. just bcoz it feels fancy to say tht my son or daughter is in engg col.. thavaru.. anga evalavu avastha padanumo athellaam students have to suffer... all parents should read this!
நல்ல பதிவு.....
ReplyDeleteவிரிவான விளக்கம், மிகவும் உபயோகமான தகவல்கள், என்னுடைய மகன் இப்போது பத்தாம் வகுப்பு படிக்கின்றான், விவாதிப்பதற்கு நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கீங்க, நன்றி!!
ReplyDeleteநல்ல கருத்துக்கள்.. தொடருங்கள்.. ஆவலோடு காத்திருக்கிறேன்..
ReplyDeleteகொடி துளிர்க்கும் போதே அது படர நல்ல பந்தல் அமைப்பது போலிருக்கிறது உங்கள் பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்
கட்டுரையின் தலைப்பும், கடைசி வரியும் சரியான முடிச்சு.. இப்படித்தான் இருக்க வேண்டும். பிரச்சனைகளை விளக்கி இருக்கும் விதம் எளிமையானது. இனி இதை வைத்துக் கொண்டே என்னால் சிலருக்காவது உதவு முடியும்.
ReplyDeleteஅடுத்த கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். காரணம் அதில் வரப்போகும் பிரச்சனையைத் தீரக்கும் தீர்வுகள்...
மைதிலி,
ReplyDeleteபொறியியல் படிப்பின் நிதர்சனத்தைத் தெளிவாக விளக்கி உள்ளீர்கள். பொறியியல் படிக்க விழையும் ஒவ்வொரு மாணவனும்/மாணவியும், அவர்களைப் பொறியியல் படிக்கத் தூண்டும் பெற்றவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய பதிவு...
மிகவும் உபயோகமான விஷயங்களை அலசியிருக்கிறீர்கள் மைதிலி. அடுத்த பதிவுக்கு நானும் காத்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி நண்பிகளே... சித்ரா, ஆனந்தி அண்ட் தமிழினி.
ReplyDeleteL.K தம்பி.. ரொம்ப நன்றி.. முதல் முறையா வந்திருக்கீங்க... வரவேர்க்கிறேன்.
ReplyDelete@ ஏஞ்ஜல் .. “they must have atleast a clear understand about the basics of subject” சரியா சொன்னம்மா.. உனக்கு இந்த பதிவு உபயோகமா இருந்திருக்குமுன்னு நம்புகிறேன்.
ReplyDeleteSheik Mukthar.... You are Welcome to my blog. Thanks for reading this article and posting your comment.
ReplyDelete@ Matangi Mawley .. Welcome to my blog.. //anga evalavu avastha padanumo athellaam students have to suffer...// very true and thanks for appreciating this article.
ReplyDelete@ மலர்.... நன்றி தோழி..
ReplyDelete@ SUFFIX என்னால் உங்களுக்கு உபயோகமான கருத்துக்கள் சொல்ல முடிந்த்தில் மிகவும் சந்தோஷம். உங்கள் மகனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹுஸைனம்மா... உங்களுடைய துடர்ந்த ஆதரவு எனக்கு ஒரு நல்ல தூண்டுகோலாக இருக்கு.. நன்றி தோழி.
ReplyDeleteகோமா.. //கொடி துளிர்க்கும் போதே அது படர நல்ல பந்தல் அமைப்பது போலிருக்கிறது உங்கள் பதிவு// ரொம்ப நன்றிங்க.. இந்த உவமைக்கு என்னுடைய எழுத்து தகுதி உடையதாண்ணு தெரியல... என்னால் முடிந்த அளவு எழுத முயற்சிக்கிறேன்.
ReplyDeleteஅண்ணன் செல்வகுமாருக்கு.. உங்களுடய தொடர் ஊக்குவிப்பே இதற்கு காரணம்.... நன்றி அண்ணா !!
ReplyDeleteதோழி அம்மு...
ReplyDeleteதவறாமல் எனக்கு ஊக்கமளிக்கும் உங்களை போன்றோரால் தான் என்னால் அக்கரையுடன் எழுத முடிகிற்து.. நன்றி
@ ராமலக்ஷ்மி.. நன்றி, அடுத்த படிவிலும் நல்ல கருத்துக்களை பகிர பொறுப்பேற்று கொள்கிறேன்...
ReplyDelete#### இந்த பதிவுக்கு வாக்களித்து இத்னை ப்ரபலப்படுத்திய அனைவருக்கும் நன்றி ####
ReplyDeleteUseful Article. Thanks For Your Sharing..
ReplyDeleteகண்டிப்பாக பிள்ளைகளின் ஆர்வம், அவர்களின் ஈடு பாடு தெரிந்து அவர்களுக்கு வழி நடத்துவது நல்லதே.
ReplyDeleteரொம்ப பயனுள்ள பதிவு
இன்றைய பொறியியல் படிப்பு மோகத்திற்கு சவுக்கடி.தொடரட்டும் உங்கள் சமுதாயப்பணி.ஆ.ஈசுவரன்,திருப்பூர்.
ReplyDelete