ஒரு அந்தி சாயும் நேரத்தில்..........
வீட்டு முகப்பில் நின்றிருந்தேன்
சட்டென்று சோ என்ற மழை கண்ணாடி துகள்களாய்
எங்கும் பனி மூட்டம் போலே அதனூடே சிறுவெளிச்சம்
சூரியனா? சந்திரனா? யாருடையது?
பறவைகளின் கீச்சு குரல் இசையாய் வீழ
தூரத்தில் மின்மினி பூச்சிகளாய் ஒளி வீசும் வீடுகள்
மனிதர்கள் சுகமாய் பயமின்றி உறங்கும் கூடுகள்
ஒரு நொடியில்
சொர்க்க பிரதேசமாய் மாறியது
மழையின் சாரல்கள் அழகாய் தெறித்தது சிதறியது
இது கண்ணுக்கு மட்டுமே தெரியும் கவிதையா?
மழைத்துளிகளின் பதச்சுவடு தெரியும் நடனமா?
மின்கம்பத்தில் இருந்து பறக்கும் தீ பொறிகள்
மழையை ஊக்குவிக்கும் கைதட்டல்களா ?
சில்லென்ற காற்று உடலை வருடும் போது
ஒரு சுகம் சட்டென தோன்றி மறைந்தது
எனையறியாது யாருமற்ற ஒரு ஏகாந்த நிலை
கண்களின் ஓரம் கசிந்த நீர் துளியாய்
என் தனிமையை உணர்திச்சென்றது !!!!