எனக்குப்பிடித்த பத்துப்பெண்கள்... தொடர் பதிவுக்கு என்னையும் ஒரு பதிவாளராக மதித்து அழைத்த சித்ரா சாலமனுக்கு நன்றி..
இந்த பதிவின் விதிமுறைகள்..
* உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
*வரிசை முக்கியம் இல்லை.,
*ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும், இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.
என்னை கவர்ந்தவர்களும்... நான் பார்த்து வியந்தவர்களும் இந்திய பெண்களாக இருக்க வேண்டுமென்பதில்லையே..
இந்த நூற்றாண்டிலும் முட்டி மோதி எப்படியாவது முன்னேற வேண்டும் என்று தத்தளித்து கொண்டிருக்கும் பெண்களே !!! சில / பல நூற்றாண்டுகளுக்கு முன் பெண்ணடிமை தலை விரித்துஆடிகொண்டிருந்த காலத்திலும் முன்னேறிய இவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்??
- கவிதை : கானா - இவள் 12 ஆம் நூற்றாண்டில் பெங்காலில் வாழ்ந்த ஒரு கவிஞர், வான சாஸ்திரத்திலும் மேதையாக இருந்த்தாள். இவளது கணவன் கணிதம் மற்றும் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய வராஹமிஹிரா . கணவனை விட மிக துல்லியமாக வானசாஸ்திரம் கணித்ததனால் நாக்கு துண்டிக்கபட்டவள். நாக்கு துண்டிக்கப்பட்டப்பின்னும் கானா வசன் (கானாவின் வாக்குகள் ) என்ற பெயரில் கவிதைகளும் விழிப்புணர்ச்சி வருத்தும் கருத்துக்களும் எழுதினாள்.
- புலமை: அவ்வை - கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று நமக்குபோதித்தவர். உலக இன்பங்களில் இடுபாடு வேண்டாம் என்று திருமணம்வெறுத்து இறைவன் அருளால் வயோதிக கோலம் பூண்டு உலக மக்களுக்கு எளிய பாடல்கள் மூலம் நன்நெறி புகட்டினார். இவரோடு சேர்ந்து நினைவுக்கு வருபவர் கே.பி.சுந்தராம்பாள்.
- மருத்துவம்: மிராண்டா ஸ்டூஆர்ட்( Dr.ஜேம்ஸ் பாரி )ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார். பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை. ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார். ஆணாகவே வாழ்ந்தாள். அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம்செய்த பெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டுபிடித்தார்.. எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார்..
- அறிவியல்: மேரி க்யூரி - குடும்பமே அறிவியல் அராயிச்சியில் இறங்கினால் அவர்கள் வீட்டு கழிவறையிலும் சில நோபல் பரிசுகள் இருக்குமாம்.. போலந்தில் தாயும் மகளும் சேர்ந்து மூன்று நோபல் பரிசுகளை வென்றெடுத்தனர். மன்யா ஸ்கோலடோவஸக 1867ல் போலந்தில் பிறந்தார். வளர்ந்த பிறகு தான் பேரை மேரி என்று மாற்றிக்கொண்டார். முதல் நோபல் பரிசை 1906 ஆம் ஆண்டு பெற்றார். மீண்டும் 1911 ஆம் ஆண்டு மற்றொன்று. இவர் மகள் ஐரீன் 1935 ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசை தட்டிச்சென்றார். இவர்கள் வீட்டு ஆண்களும் சளைத்தவர்களல்ல.. எப்பேர்பட்ட வேதியல் குடும்பமப்பா.
- ஆன்மிகம்: மாதா அமிர்தானந்தமாயி - ஒரு சாதாரண மீனவ குடும்பத்தில் பிறந்தவர். ஒன்பது வயது வரையே பள்ளி சென்றவர். இன்று உலகம் முழுவதும் அம்மா.. அமமச்சி.. என்று அன்போடு அழைக்கப்படுபவர்.ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பது.. கல்வி கிடைக்காத குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது என்று பல சமூக சேவைகள் செய்பவர்..
- ஆசிரியர்: சாவித்திரி பாய் - இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். 1848 ஆம் ஆண்டு பூனாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் நிறுவினார். 1852ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார்.
- விமான ஓட்டுனர்: பிரேம் மாத்தூர் - இவர் இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டுனர். விமானம் ஓட்டும் பயிற்சி இருந்தும் அவருக்கு எந்த விமான கம்பெனியிலும் வேலை கொடுக்கவில்லை. பெண் ஓட்டுனர் என்றல் எங்கள் விமானத்திற்கு ஆள் வரமாட்டார்கள் என்று கேலி செய்தனர். மனம் சோர்ந்து தொழிலதிபர் ஜி. டி.பிர்லாவின் தனிப்பட்ட விமான ஓட்டுனராக பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டு டெக்கான் ஏர்லைன்ஸ் அவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியது.
- அரசியல்: இந்திரா காந்தி - இவருடைய அரசியல் திறமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.. நம் நாட்டின் ஒரே பெண் பிரதமர்..
- காவியப்பெண்: கண்ணகி - இவள் கற்புக்கரசியாய் இருந்ததல்ல என்னை வியக்க வைத்தது.. இவள் குற்றங்களை தட்டி கேட்டதும் துணிந்து மதுரையை எரித்ததும் தான் என் வியப்பு. சங்ககாலத்து பெண்களே இப்படி சித்தரிக்கப்பட்டிருக்கும் போது இக்காலத்து பெண் எப்படி இருக்கவேண்டும்??
- கல்வி: சந்திரமுகி பாசு : கல்கத்தா பல்கலை கழகத்தில் 1886 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்ற முதல் இந்திய பெண். இவருடைய இரு தங்கைகள் தான் கல்கத்தா மருத்துவ கல்லூரியில் முதன் முதலாக படித்த பெண்கள். எத்தனை முதல்கள் ஒரே குடும்பத்தில்..
இதில் அறிவியலுக்காக தன் இன்னுயிரை ஈண்ட கல்பனா சாவ்லா பெயரையும் சேர்த்திருக்கலாம் அக்கா. நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteThambi, ithu oru thodar pathivaagayaal enakku mun ezhuthiyavargal sollaatha peyaraaga irukkattume entru thaan avrgal peyarai vitten.
ReplyDeleteகாவியப்பெண்: கண்ணகி - இவள் கற்புக்கரசியாய் இருந்ததல்ல என்னை வியக்க வைத்தது.. இவள் குற்றங்களை தட்டி கேட்டதும் துணிந்து மதுரையை எரித்ததும் தான் என் வியப்பு. சங்ககாலத்து பெண்களே இப்படி சித்தரிக்கப்பட்டிருக்கும் போது இக்காலத்து பெண் எப்படி இருக்கவேண்டும்??
ReplyDelete...........அப்படி போடு அரிவாளை! Super!
மைலு எதிர்பார்க்கவே இல்லை சூப்பர்மா கலக்கிட்டே வித்யாசமா பத்துப் பேர் பற்றிய செய்தி
ReplyDelete//மிராண்டா ஸ்டூஆர்ட்( Dr.ஜேம்ஸ் பாரி )ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார்//
ReplyDeleteஇவரின் biograghy/autobiography இருக்கிறதா?
நீங்கள் சொல்வது போல " வைராக்கியம்" மிக்க அந்த மனதை தெடிந்துகொள்ள ஆவல் எழுகிறது.
தேடுதலை தீவிரப்படுத்துவதே பதிவுகளின் வேலை என் நினைக்கிறேன் உங்களின் இந்த பதிவு மிராண்டா ஸ்டூஆர்ட் பற்றிய என் தேடுதலை துவங்கி வைக்கிறது. வாழ்த்துக்கள்.
மைதிலி,
ReplyDeleteபத்துப் பெண்கள் பட்டியலில் முதலில் உள்ள கானா பற்றி தற்போதுதான் கேள்விப்படுகின்றேன்.
தொடர்பதிவுகள் நல்லாத்தான் இருக்கு.
Thanks Thenammai akka and R.Selva annaa for your comments.. I am happy that I was able to add atleast one unknown women to your memory.
ReplyDeleteஅருமையான தேர்வு; நிறைய தெரிந்து கொள்ளவேண்டியவர்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி மைதிலி மேடம்.
Jayamaarthaandan sir, thanks for your comments. vaazhththukkalukku nantri..
ReplyDeleteThere are some many sites about him/her.. this is one
http://en.wikipedia.org/wiki/James_Barry_(surgeon)
என்ன ஒரே கூட்டமா இருக்கு
ReplyDeleteMythili,
ReplyDeleteNice post..But still I was not able to digest one thing...
//காவியப்பெண்: கண்ணகி - இவள் கற்புக்கரசியாய் இருந்ததல்ல என்னை வியக்க வைத்தது.. இவள் குற்றங்களை தட்டி கேட்டதும் துணிந்து மதுரையை எரித்ததும் தான் என் வியப்பு.///
if the King was the culprit....only punish that king..why unnecessarily entire Madurai needs to be put on flames. Just consider kids, People ,Animals living in that time in Madurai. I am not convinced with this action ( and Elongovadikal ) .
நல்ல தேர்வு.
ReplyDeleteவாங்க... RDX அந்நியன்..கூட்டமாவா ... ஆ.. ஆ.. ஆ. ஆ. இருக்குது......து நீங்க இன்னைக்கு போன இடமெல்லாம் நெருக்கடிதான் போல... பாத்து போங்க... கையில வெடுகுண்டு ஒண்ணும் இல்லையே ??
ReplyDeleteBaskar, Thanks for the comments. I have clearly mentioned that I am surprised about her courage and did not mention anywhere that she did the right thing by burning Madurai.
ReplyDeleteI see that today's women are cowards (kozhaigal)to even face their own problems and was just telling them to look at kannagi who was so courageous even at sangam time..
நன்றி இராமசாமி கண்ணன்..
ReplyDeleteநன்றி ஸ்டார்ஜன அவர்களே..
ReplyDeletewho is this RDX anniyan Mylu..? ivara naan parthathu illaiyee ..?Terror aa irukkaar...
ReplyDeletehahaha :)))
நல்ல தேர்வுகள். மிக நன்று.
ReplyDeleteஅறியாதவர்களும் அறியக்கிடைத்த அருமையான பதிவு மைதிலி.
ReplyDeleteThanks பித்தனின் வாக்கு and க.நா.சாந்தி லெட்சுமணன்.
ReplyDeleteமைதிலி 10 பெண்களை பற்றியும் கலக்கலான பதிவு.
ReplyDeleteயார்ப்பா அது RDX அந்நியன் , ரொம்ப கூட்டமா இருக்காமே, அது நீங்க கொடுத்த நகைச்சுவை பதில் சரியான காமடி
மிக அருமையான தேர்வு.
ReplyDeletehttp://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
ReplyDelete:)
nandri Jaleelaa and Ramalakshmi.. for your thoughtful comments.
ReplyDeleteThank you Shankar for informing me about this blog being published in youthful vikatan.. As usual I did not know it was published... Thanks a lot.
ReplyDeleteமைதிலி,
ReplyDeleteதோழிகள் அனைவரும் பதிவர் உலகத்தில் தங்கள் முத்திரையைப் பதிப்பது பெருமை...
அதிலும், நீங்கள் சில தெரியாத பெண்மணிகளையும் அறிமுகப் படுத்தியது அருமை...
அம்மு
மைதிலி
ReplyDeleteஅசர வைத்த பெண்கள் பட்டியல்... பட்டியலில் நிறைய பெயர் இப்போது தான் எனக்கு அறிமுகம்.. எல்லோரும் தெரிந்தவர்களையே சொல்வதை விட, இது போல் தெரியாத சாதனை பெண்களை பற்றி சொன்னது பாராட்டுக்குறியது..
மைதிலி,
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டிருப்பவர்களில் நிறையப் பேரை இப்போதான் அறிகிறேன் நான். புதிய தகவல்களுக்கும், அறிமுகங்களுக்கும் மிகவும் நன்றி!!
கண்ணகியின் மன்னரையே எதிர்க்கும் தைரியம் பாராட்டப்படவேண்டியதுதான் என்றாலும், தன் கணவனின் தவறைத் தட்டிக் கேட்காதது ஏன்? அப்படி ஒரு ஒழுக்கத்தில் குறைந்த கணவனுக்காக ஒன்றும் அறியா மக்களைப் பலிகொடுத்தது ஏற்கமுடியாதது; அவளை இப்பட்டியலில் என்னால் ஏற்கமுடியவில்லையென்றாலும், உங்கள் பிளாக் உங்கள் உரிமை...
வாழ்த்துக்கள்!! :-))
அம்மு,
ReplyDeleteநீங்கள் இங்கு வந்து அருமையான கமெண்ட் போட்டதில் எனக்கு பெருமை.. உங்களை போன்ற தோழிகள் உந்துதலால் தான் ப்ளாக் தொடங்க முடிந்தது.. நன்றி
ஹுஸைனம்மா, நன்றி நல்ல கருத்துக்களை முன் வைத்ததற்கு..
ReplyDeleteநீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் என்னுடைய வாதம்....
கோவலனுக்கு மாதவி மேல் ஆசையிருந்தால் கண்ணகி என்ன செய்ய முடியும் அவன் விருப்பபடியே விட்டுவிடுவது தானே ஞாயம். கண்ணகி நல்ல காதலியாக இருந்திருக்கிறாள் அதனால் அவள் கணவனுக்கு என்ன பிடித்ததோ அதை செய்யட்டும் என்று விட்டுவிட்டாள். உண்மையான காதல் திரும்பி வரும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்திருக்கலாம்.அவள் பொங்கி எழுவதற்கு அவளுக்கு domestic violence நடந்ததாக நான் எங்கும் படிக்கவில்லை . அவன் இரண்டு பேரிடமும் ஒருவருக்கு தெரியாமல் மற்றவரிடம் உறவு கொள்ளவில்லை. இது எல்லாவற்றையும் விட அது அவளுடைய தனிப்பட்ட வாழ்கை.
இரண்டாவது... நாட்டை காக்க வேண்டிய மன்னன் செய்த தவறு. களவு அறியாத ஒரு உயிரை திருட்டு பட்டம் கட்டி, ஊரெங்கும் அறிவித்து கொன்றுவிட்டான். இதை தட்டிகேட்க்கவில்லை என்றால் பின் அவன் நாட்டில் வாழும் குடிமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது...
Congratulations, Mythili! This one is chosen in Youthful Vikatan's "Good Blogs" ................
ReplyDeleteKeep Rocking!
ம்ம், நிறைய மாற்றூக்கருத்துக்கள் இருந்தாலும், ஆமாம், அவளது தனிப்பட்ட வாழ்க்கை அவளது இஷ்டம்.
ReplyDelete//நாட்டை காக்க வேண்டிய மன்னன் செய்த தவறு. .. இதை தட்டிகேட்க்கவில்லை என்றால்//
மன்னன் தான் செய்த தவறை அறிந்தவுடன் உயிரை விட்டுவிட்டானே, அதன்பிறகும் ஏன் ஒன்றுமறியா மக்களைக் கொல்ல வேண்டும்?
மன்னனைத் தட்டிக்கேட்ட தைரியம் வியக்கத்தக்கதுதான். இந்தக் காலத்தில் அரசகுடும்பம் என்றாலே பயந்து ஒதுங்கவேண்டிய நிலையில் அந்தக் காலத்தில் அரசர்களின் நீதிவழுவாமையும், எளிமையும் ஆச்சர்யம் தருகின்றன.
மிக்க நன்றி ஹுஸைனம்மா !! இப்போ நீங்க கேட்டிருக்காது ரொம்ப சரியான கேள்வி. இந்த விஷயத்த நான் ஏற்கனவே சிந்திச்சு பார்த்திருக்கேன். அவள் செய்ததது தவறுதான் ஆனா அப்போ அவளுக்கு இருந்த துணிச்சல்ல ஒரு சதவிதம் கூட நம் பெண்களுக்கு இப்போ இல்லையே என்பது எனக்கு கவலை அளிக்கிறது. நம்ம பெண்கள் வீட்டிலும், வெளியிலும் ஆண்களுக்கு பயந்து அவர்கள் செய்யும் எமாற்றுகளையும், பாலியல் கொடுமைகளையும்,கேலிகளையும் பொறுத்துக்கொண்டு வாழ்கிறார்கள். கலியுக கண்ணகிகள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள பழகிவிட்டார்கள்
ReplyDelete@ Chitra.. Thanks dear.. I could not have done all these things without you.
ReplyDeleteஉங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என் இந்தப் பதிவில் பயன்படுத்திக் கொண்டேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!
ReplyDeleteThanks Hussainamma.. Its my pleasure for using some parts of my post. Enakku entha aatchebanayum illa..
ReplyDeleteபொதுவான, அழகான தேர்வு...
ReplyDeleteநன்றி..
nantri prakash.
ReplyDeleteபல புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது!!
ReplyDeletenantri Shafi...
ReplyDeleteமைதிலி மேடம், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
ReplyDeleteநன்றி ஸ்டார்ஜன்...என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதர்க்கு.. ப்ளாக் துடங்கும் போது எனக்கு சித்ராவை மட்டுமே தெரியும். இப்பொழுது இத்தனை பேர் எனக்கு ஊக்கமளிக்க இருப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.
ReplyDeleteவிகடனுக்கு வாழ்த்துகள்!.
ReplyDeleteநிறைய பேரை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றது இந்த இடுக்கை.
ஸ்டார்ஜனுக்கு நன்றி - சுட்டி தந்தமைக்கு.
வாங்க ஜமால்.. உங்கள அடிக்கடி என்னோட நண்பர்கள் கூட FB ல பார்த்திருக்கேன்.. நீங்க இங்கே வருவீங்கன்னு எதிர் பார்க்கவே இல்லை. நன்றி நீங்கள் வந்ததற்கும்.. வாழ்த்தியத்ற்க்கும்..
ReplyDeleteHii Mythiii.. Super Padhivu ma.. Niraya theriatha penmanigalai patri therinthu kondathil enakku mahizhchi...
ReplyDeletekeep rocking.. All the very best.. :)
பிடித்தவை பத்தில் அனைத்தும் முத்து... வாழ்த்துக்கள்
ReplyDeleteஅரசியல்: இந்திரா காந்தி - .. நம் நாட்டின் ஒரே பெண் பிரதமர்..
ReplyDeleteஒரே ஆண் பிரதமர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்
காவியப்பெண்: கண்ணகி - இவள் கற்புக்கரசியாய் இருந்ததல்ல என்னை வியக்க வைத்தது.. இவள் குற்றங்களை தட்டி கேட்டதும் துணிந்து மதுரையை எரித்ததும் தான் என் வியப்பு. சங்ககாலத்து பெண்களே இப்படி சித்தரிக்கப்பட்டிருக்கும் போது இக்காலத்து பெண் எப்படி இருக்கவேண்டும்..
இந்த காலத்து பெண் இப்படி இருக்க கூடாது....
கணவன் தவறு செய்தால் தட்டி கேட்க வேண்டும்... அதுதான் உண்மையான காதல்....
சொந்த பிரச்சினைக்காக ஊரை கொளுத்த கூடாது...
கணவன் பிரிந்து சென்ற பிறகு, ஏமாற்றி விட்டால் அல்லது இறந்து விட்டால், அவன் நினைவாகவே வாழ்வது தான் ஒழுக்கம் என்று நினைக்க கூடாது... அப்படி இருப்பது தனி பட்ட விருப்பம்... அனால் அதுதான் ஒழுக்கம் என்பது இல்லை....
ஒரு ஆணாகிய எனக்கே, கண்ணகியின் பெண் அடிமைதனமும் , முட்டாள்தனமும் பிடிக்கவில்லை... நீங்கள் எப்படி பாராட்டுகிறிர்கள் என புரியவில்லை...
இதை தவிர மற்றவை வெகு அருமை.... புதிதாக நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது... வாழத்துக்கள்