எனக்குப்பிடித்த பத்துப்பெண்கள்... தொடர் பதிவுக்கு என்னையும் ஒரு பதிவாளராக மதித்து அழைத்த சித்ரா சாலமனுக்கு நன்றி..
இந்த பதிவின் விதிமுறைகள்..
* உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
*வரிசை முக்கியம் இல்லை.,
*ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும், இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.
என்னை கவர்ந்தவர்களும்... நான் பார்த்து வியந்தவர்களும் இந்திய பெண்களாக இருக்க வேண்டுமென்பதில்லையே..
இந்த நூற்றாண்டிலும் முட்டி மோதி எப்படியாவது முன்னேற வேண்டும் என்று தத்தளித்து கொண்டிருக்கும் பெண்களே !!! சில / பல நூற்றாண்டுகளுக்கு முன் பெண்ணடிமை தலை விரித்துஆடிகொண்டிருந்த காலத்திலும் முன்னேறிய இவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்??
- கவிதை : கானா - இவள் 12 ஆம் நூற்றாண்டில் பெங்காலில் வாழ்ந்த ஒரு கவிஞர், வான சாஸ்திரத்திலும் மேதையாக இருந்த்தாள். இவளது கணவன் கணிதம் மற்றும் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய வராஹமிஹிரா . கணவனை விட மிக துல்லியமாக வானசாஸ்திரம் கணித்ததனால் நாக்கு துண்டிக்கபட்டவள். நாக்கு துண்டிக்கப்பட்டப்பின்னும் கானா வசன் (கானாவின் வாக்குகள் ) என்ற பெயரில் கவிதைகளும் விழிப்புணர்ச்சி வருத்தும் கருத்துக்களும் எழுதினாள்.
- புலமை: அவ்வை - கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று நமக்குபோதித்தவர். உலக இன்பங்களில் இடுபாடு வேண்டாம் என்று திருமணம்வெறுத்து இறைவன் அருளால் வயோதிக கோலம் பூண்டு உலக மக்களுக்கு எளிய பாடல்கள் மூலம் நன்நெறி புகட்டினார். இவரோடு சேர்ந்து நினைவுக்கு வருபவர் கே.பி.சுந்தராம்பாள்.
- மருத்துவம்: மிராண்டா ஸ்டூஆர்ட்( Dr.ஜேம்ஸ் பாரி )ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார். பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை. ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார். ஆணாகவே வாழ்ந்தாள். அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம்செய்த பெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டுபிடித்தார்.. எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார்..
- அறிவியல்: மேரி க்யூரி - குடும்பமே அறிவியல் அராயிச்சியில் இறங்கினால் அவர்கள் வீட்டு கழிவறையிலும் சில நோபல் பரிசுகள் இருக்குமாம்.. போலந்தில் தாயும் மகளும் சேர்ந்து மூன்று நோபல் பரிசுகளை வென்றெடுத்தனர். மன்யா ஸ்கோலடோவஸக 1867ல் போலந்தில் பிறந்தார். வளர்ந்த பிறகு தான் பேரை மேரி என்று மாற்றிக்கொண்டார். முதல் நோபல் பரிசை 1906 ஆம் ஆண்டு பெற்றார். மீண்டும் 1911 ஆம் ஆண்டு மற்றொன்று. இவர் மகள் ஐரீன் 1935 ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசை தட்டிச்சென்றார். இவர்கள் வீட்டு ஆண்களும் சளைத்தவர்களல்ல.. எப்பேர்பட்ட வேதியல் குடும்பமப்பா.
- ஆன்மிகம்: மாதா அமிர்தானந்தமாயி - ஒரு சாதாரண மீனவ குடும்பத்தில் பிறந்தவர். ஒன்பது வயது வரையே பள்ளி சென்றவர். இன்று உலகம் முழுவதும் அம்மா.. அமமச்சி.. என்று அன்போடு அழைக்கப்படுபவர்.ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பது.. கல்வி கிடைக்காத குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது என்று பல சமூக சேவைகள் செய்பவர்..
- ஆசிரியர்: சாவித்திரி பாய் - இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். 1848 ஆம் ஆண்டு பூனாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் நிறுவினார். 1852ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார்.
- விமான ஓட்டுனர்: பிரேம் மாத்தூர் - இவர் இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டுனர். விமானம் ஓட்டும் பயிற்சி இருந்தும் அவருக்கு எந்த விமான கம்பெனியிலும் வேலை கொடுக்கவில்லை. பெண் ஓட்டுனர் என்றல் எங்கள் விமானத்திற்கு ஆள் வரமாட்டார்கள் என்று கேலி செய்தனர். மனம் சோர்ந்து தொழிலதிபர் ஜி. டி.பிர்லாவின் தனிப்பட்ட விமான ஓட்டுனராக பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டு டெக்கான் ஏர்லைன்ஸ் அவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியது.
- அரசியல்: இந்திரா காந்தி - இவருடைய அரசியல் திறமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.. நம் நாட்டின் ஒரே பெண் பிரதமர்..
- காவியப்பெண்: கண்ணகி - இவள் கற்புக்கரசியாய் இருந்ததல்ல என்னை வியக்க வைத்தது.. இவள் குற்றங்களை தட்டி கேட்டதும் துணிந்து மதுரையை எரித்ததும் தான் என் வியப்பு. சங்ககாலத்து பெண்களே இப்படி சித்தரிக்கப்பட்டிருக்கும் போது இக்காலத்து பெண் எப்படி இருக்கவேண்டும்??
- கல்வி: சந்திரமுகி பாசு : கல்கத்தா பல்கலை கழகத்தில் 1886 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்ற முதல் இந்திய பெண். இவருடைய இரு தங்கைகள் தான் கல்கத்தா மருத்துவ கல்லூரியில் முதன் முதலாக படித்த பெண்கள். எத்தனை முதல்கள் ஒரே குடும்பத்தில்..