Thursday, December 17, 2009

பால்ய கால சிநேகிதம்.....

அன்று......

கனவுகளே இல்லாத காலமது....நம்முடைய பால்ய காலம்...
ஏனென்றல் கனவு காண நேரமில்லை..காரணம் சிநேகிதர்கள் தான் ....
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ... எல்லாம் இன்ப மாயம்..
ஒரு போதும் துயரமில்லை,பொறுப்பில்லை, படிப்பில்லை எதற்கும் கவலையில்லை..

பால்ய கால சிநேகிதர்கள் வெண் முத்துக்களை போன்றவர்கள்..
முத்துகள் பல விதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்.. நானும் ஒரு வெண்முத்தாக அக்கூட்டத்தில் இருந்தேன்.. எப்பொழுதும் சலசலப்பு தான்... போட்டியில்லை, பொறாமையில்லை, யாருக்கும் பயமில்லை,

பாடங்களுக்கும் வாழ்கைக்கும் அப்பாற்பட்ட விஷயங்களுக்கு தோழிகளே குரு...
வாழ்கையை பற்றி எப்பொழுதும் சிந்திக்க தேவை இருந்ததில்லை....
பகிர்ந்து கொள்ள வேண்டிய எல்லாவற்றையும் பகிர்ந்தோம்.....
சேர்ந்து சாப்பிட்டோம், விளையாடினோம், படித்தோம்,எதையும் விட்டுவைக்கவில்லை.

என் தவறு...

நண்பர்களை பற்றி ஒருபோதும் தெரிந்துகொண்டதில்லை.....
தோழிகளின் பெயர் தெரியும்.. அவர்களுடைய தோழமை தரும் இதம் தெரியும்..
அவர்கள் பெற்றோர் யார், எங்கிருந்து வருகிறார்கள் எதுவும் நினைவில்லை ...
பட்டாம்பூச்சி போன்ற ஒரு வழக்கை.. நட்பின் அருமை அப்போது தெரியவில்லை

பள்ளி படிப்பு முடிந்தது....எங்கே போக போகிறோம் ..என்ன செய்ய போகிறோம்..
ஒரு பிடிப்பும் இல்லை. தோழிகளில் சிலர் என்ன செய்தார்களோ அதையே நானும் செய்தேன்..
பொறியியல் கலூரியில் சேர்ந்தேன்..வழக்கை பரபரப்பானது..சுயனலக்காரியாய் மாறினேன்...
பரபரப்பிநிடையில் பால்ய நண்பர்களிடமிருந்து தொடர்பு விட்டுபோனதைகூட நான் உணரவில்லை...

கல்லூரியிலும் ஆட்டம்/பாட்டம் இருந்தது..அனால் எல்லாம் ஒரு அளவோடு தான்..
ஏன் தெரியுமா முத்துக்களை தரம் பார்க்க கற்றுக்கொண்டேன் ...
என்னை அறியாமல் என்னை சுற்றி வேலிகள் போட்டுக்கொண்டேன் ...
அங்கும் தோழர்கள்..ஏராளம்....அவரை பற்றி கவலை பட நேரமில்லை....

இன்று....

என்றாலும் சிறு சந்தோஷங்கள், இனிய நினைவுகள் இருக்க தான் செய்தது...
கலூரி படிப்பு முடிந்தது..இருந்த கொஞ்சநஞ்சம் தோழர்களும் காணாமல் போனார்கள்... இலையில்லை தொலைத்து விட்டேன்..
வழக்கை தொடர்ந்தது...கல்யாணம், குழந்தை, வேலை.சொந்தம், பந்தம், அப்பப்பா.. கடிவாளம் போட்ட குதிரை மாதிரி ஓடி அலுத்து விட்டது..ஒரு அடிகூட முன்வைக்க முடியவில்லை

என்ன வாழ்க்கையிது என்று..ஒரு சமயம் அலுத்து ஓய்ந்திருந்த போது....
மெல்லிய இனிய தென்றல் காற்றை போல் நண்பர்களின் முகங்களும் நினைவுகளும்...நீர் குமிழிகளாய் ..
என்னை அறியாமலே நான் என் மனதில் பூட்டி வைத்து விட்டு சாவியை எங்கோ தொலைத்திருந்தேன்.
சாவியை தேடி அவர்களை விடுதலை செய்தேன்... நினைவுகள் நிற்கவேயில்லை.

பற்றி கொண்டேன் அந்த நினைப்புகளை..நினைவுகளே இத்தனை ஆசுவாசமும் தருகிறதே...
அவர்களை சந்தித்தால் வாழ்கையில் புதிய தெம்பும் திருப்பமும் வரும் என்று மனது சொல்லியது..
தொலைத்து விட்ட நண்பர்களை தேட தொடங்கினேன் கிடைக்க தொடங்கினார்கள் சந்தோசம் பொங்கிற்று...
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்...இந்த பரந்த உலகின் எல்லா மூலைகளிலும்..... நிறுத்தபோவதில்லை.

22 comments:

  1. தோழமை தேடி வரும் உன் மனதில் ......... என்றும் நானும் ஒரு தோழியாய்.
    முதல் பதிவில் அடி எடுத்து வரும் உனக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. முதல் பதிவில் அடி எடுத்து வரும் உமக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாங்கோ... வாங்கோ....

    வலைப்பதிவுக்கு வந்திருக்கும் உங்களை வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.

    ஆரம்பமே அருமை...

    ReplyDelete
  4. // ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ... எல்லாம் இன்ப மாயம்..
    ஒரு போதும் துயரமில்லை,பொறுப்பில்லை, படிப்பில்லை எதற்கும் கவலையில்லை.. //

    அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே... நண்பனே.. பாட்டு ஞாபகம் வருவதை தவிர்க்க இயலவில்லை.

    ReplyDelete
  5. Superb.....It really touched my heart...After reading it..a minute of silence ....it was like my own life Kavidhai

    ReplyDelete
  6. ragavan,
    Shivaji pada dayalouge mathiriye irukku... After you told I could realise it.

    Thank you very much for coming to my blog house warming function and your wishes. I had no time..to write.. still I am being pushed in here by my Face Book/child hood friends Chitra, Amudha, George, Karikal etc. Special thanks to them.

    ReplyDelete
  7. Thanks Prakash for your entry in to my blog and posting your feelings. I think every one of us will be passing through this phase at sometime in life.

    ReplyDelete
  8. Dear Mythili, Excellent, it shook my heart for a while and you have expressed your inner feelings in search of lost-friends very deeply. We are also going through the similar situation. We are always there for you as the best friends.

    Regards,

    Syed

    ReplyDelete
  9. நல்லா எழுதியிருக்கீங்க மைதிலி. தரமான இடுகைகளை தொடர்ந்து தர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Syed... I am happy that i got you back after 15 years..Thanks for the f/b

    ReplyDelete
  11. Hi Shafi.. unga pera kandupidichu ezhutha time ahidichu..Thanks for encouraging me..nantri.

    ReplyDelete
  12. நல்ல எண்ண அலைகள் மீண்டும் மீண்டும் கரை கடக்கட்டும்

    ReplyDelete
  13. Pudhiyavan, mikka nantri ungal vazhtukkalukku..vimarsanththukku

    ReplyDelete
  14. Arumai arumai arumai mythiliiiiiiiiiiii
    i like ur post and friendship
    u r welcome pa

    ReplyDelete
  15. முதல் படி ஏறி...படிப் படியாய் முன்னேற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. nantri thenammaikkum... gomavukkum... I am not finding much time to write...Thanks for the encouragement.

    ReplyDelete
  17. ரொம்ப நல்லாருக்கு.... மறுபடி போயி college சேரனும் போல இருக்கு.... என்னை நேசிச்ச சில இதயங்கள் எங்கேனு இத படிச்சப்ரம் என்னையே கேட்டுகிட்டேன்.... ஆழ்மனசுலேந்து பேசிருகீங்க.... தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  18. காலத்தின் வேகத்தால் பழைய தோழமைகளை தொலைத்துவிட்டு நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் என் நினைவுகளில்!


    நல்லா எழுதியிருக்கீங்க !

    ReplyDelete
  19. முதன் முதலில் உங்கள் வலைக்கு வருகிறேன் மைதிலி.....

    அருமையான முதல் பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......... தாங்கள் மேலும் இது போன்ற பல பதிவுகளை இட வேண்டும் என்பதே என் அவா....

    //பால்ய கால சிநேகிதர்கள் வெண் முத்துக்களை போன்றவர்கள்.. முத்துகள் பல விதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்.. நானும் ஒரு வெண்முத்தாக அக்கூட்டத்தில் இருந்தேன்.. எப்பொழுதும் சலசலப்பு தான்... போட்டியில்லை, பொறாமையில்லை, யாருக்கும் பயமில்லை//

    மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்.... நட்பின் பெருமை அழகாக விளக்கப்பட்டுள்ளது.....

    //பள்ளி படிப்பு முடிந்தது....எங்கே போக போகிறோம் ..என்ன செய்ய போகிறோம்..
    ஒரு பிடிப்பும் இல்லை. தோழிகளில் சிலர் என்ன செய்தார்களோ அதையே நானும் செய்தேன்.. //

    மிக சரி... யாரும் இப்படியே செய்வார்கள்... அந்த சமயத்தில் சுயமாக முடிவெடுக்க தயக்கம் இருக்கும்.... கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு சூழ்நிலை நிலவும்...

    //முத்துக்களை தரம் பார்க்க கற்றுக்கொண்டேன் ...
    என்னை அறியாமல் என்னை சுற்றி வேலிகள் போட்டுக்கொண்டேன் //

    வாவ்.... வேலியிட்டு கொண்ட முத்து....

    //மெல்லிய இனிய தென்றல் காற்றை போல் நண்பர்களின் முகங்களும் நினைவுகளும்...நீர் குமிழிகளாய் ..
    என்னை அறியாமலே நான் என் மனதில் பூட்டி வைத்து விட்டு சாவியை எங்கோ தொலைத்திருந்தேன்.
    சாவியை தேடி அவர்களை விடுதலை செய்தேன்... நினைவுகள் நிற்கவேயில்லை. //

    ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க மைதிலி....

    //பற்றி கொண்டேன் அந்த நினைப்புகளை..நினைவுகளே இத்தனை ஆசுவாசமும் தருகிறதே...
    அவர்களை சந்தித்தால் வாழ்கையில் புதிய தெம்பும் திருப்பமும் வரும் என்று மனது சொல்லியது//

    கரெக்ட்தான்.... அவர்களை சந்தித்தால், நாமும் அந்த இனிய நினைவுகளில் மூழ்க ஒரு வாய்ப்பாகும்.... அந்த நினைவுகளை ரீவைண்ட் செய்து பார்த்தால், பல இனிப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும்...

    //தொலைத்து விட்ட நண்பர்களை தேட தொடங்கினேன் கிடைக்க தொடங்கினார்கள் சந்தோசம் பொங்கிற்று...
    இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்...இந்த பரந்த உலகின் எல்லா மூலைகளிலும்..... நிறுத்தபோவதில்லை. //

    அனைவரும் கிடைக்க வாழ்த்துக்கள்..... இதோ இன்றிலிருந்து நானும் அவர்களுள் ஒருவனாய்.... என்ன, கொஞ்சம் புதியவன்...

    நேரமிருப்பின் என் வலைகள் பக்கம் வருகை தாருங்கள்....

    www.jokkiri.blogspot.com

    www.edakumadaku.blogspot.com

    ReplyDelete
  20. Thanks to Anbu thozhan, Priya and R.Gopi for your time and comments.

    ReplyDelete